close
Choose your channels

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் ஒரே மகள் மரணம்.. ஜிம்மில் நடந்தது என்ன?

Friday, July 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் நடிகை எம்என் ராஜம் அவர்களின் ஒரே மகள் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எம்ஜிஆர், சிவாஜி உட்பட பல பிரபலங்களின் படங்களில் எம்என் ராஜம் நடித்துள்ளார் என்பதும் அவரது கணவர் பிரபல பாடகர் ஏ.எல்.ராகவன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஎல் ராகவன் - எம்என்.ராஜம் தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்த நிலையில் மகள் நளினா, சரவணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சரவணன் என்பவர் பழம்பெரும் நடிகர் எம் கே ராதாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நளினா இன்று ஜிம்மில் வொர்க் அவுட் செய்து கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நளினாவின் மகன் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் அவர் வந்த பிறகு அவரது இறுதி சடங்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment