குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் MMR தடுப்பூசி: கொரோனா சிகிச்சைக்கு கைக் கொடுக்குமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
தட்டம்மை மற்றும் ரூபெல்லா போன்ற தொற்றுகளுக்கு எதிராக குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் MMR தடுப்பூசி தற்போது கொரோனா நோய் சிகிச்சையில் பெரிதும் உதவியாக இருக்கும் என்ற தகவலை ஒரு ஆய்விதழ் வெளியிட்டு இருக்கிறது. பொதுவாகத் தடுப்பூசி தயாரிக்கும்போது நோய்த்தொற்றை ஏற்படுத்தும் கிருமிகளை வைத்தே தடுப்பூசி தயாரிக்கப்படும். ஆய்வகத்தில் வைத்து நோய்த்தொற்றின் வீரியம் குறைக்கப் பட்டு இருப்பதால் சிறிய அளவிலான நோய்க்கிருமிகள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அதற்கு பதிலான நோய்த்தொற்றை மனித செல்லுக்கு அடையாளம் காட்டி நோய்த்தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு மண்டலங்களை வலுப்படுத்தும்.
அந்த வகையில் பெரும்பாலான நோய்களுக்கு எதிராக மருத்துவ உலகம் தடுப்பூசியை தயாரித்து பயன்படுத்தி வருகிறது. ஆனால் கொரோனா விஷயத்தில் என்ன நடக்கும் என்பதே இதுவரை புரியாத புதிராக இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று மனித உடலில் பல உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடுவதால் சிகிச்சை முறையும் தற்போது சிக்கலாக மாறிவருகிறது. இதனால் விஞ்ஞானிகள் புதுப்புது ஆய்வுகளை மேற்கொண்டு கொரோனா சிகிச்சை முறைகளை நெறிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கொரோனா வைரஸ் சுவாச உறுப்புகளில் ஏற்படுத்தும் கிருமித்தொற்றை அழிப்பதற்கு MMR தடுப்பூசி பெரிதும் பயன்படும் என்பதை விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்த தெளிவாக விளக்கங்கள் MBio என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது. தடுப்பூசி வீரியமுள்ள நோய்கிருமிகளைக் கொண்டே நோயை குணப்படுத்தும். ஆனால் தொடர்பில்லாத நோய்த்தொற்றுக்கு எதிராகவும் சில நேரங்களில் பாதுகாப்பு அளிக்கும் வகையில் லுகோசைட்டுகளுக்கு (ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களுக்கு) பயிற்சி அளித்து நோய் எதிர்ப்பு மண்டலங்களை வலுப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் விளக்கம் அளிக்கின்றனர். அப்படி கொரோனா வைரஸ்க்கு எதிராக MMR தடுப்பூசி பயன்படும் என சோதனை மூலம் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பூஞ்சைகளை வளர்த்து அது ஏற்படுத்தும் நோய்க்கு எதிராக MMR தடுப்பூசி பயன்படுத்தி விஞ்ஞானிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பூஞ்சையின் நோய்க் கிருமிக்கு எதிராக இந்த மருந்து நல்ல முறையில் வேலை செய்தது எனவும் விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். MMR தடுப்பூசி என்பது குழந்தைகளுக்குப் பயன்படுத்த படும் தடுப்பூசி என்பதால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் விளக்கம் அளிக்கின்றனர்.
சிறிய நோய்த்தொற்றுகளில் பயன்படும் இந்த மருந்து கொரோனா நோய்த்தொற்றுகளில் செப்சிஸ் எனப்படும் கிருமித்தொற்றை கட்டுப்படுத்தும் எனவும் கூறுகின்றனர். கொரோனா வைரஸின் கிருமித்தொற்றை கட்டுப்படுத்துவதால் நுரையீரலில் ஏற்படும் பெரும்பாலான பாதிப்புகள் குறையும் என நம்பப்படுகிறது. கொரோனா சிகிச்சைக்கு உரிய பாதுகாப்பான மருந்தாக MMR தடுப்பூசி இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout