கூவத்தூரில் இருந்து போரூர். சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் மாற்றம்?
- IndiaGlitz, [Sunday,February 12 2017]
சசிகலா முதலராக வேண்டும் என்று ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏக்கள் கடந்த நான்கு நாட்களாக ஈசிஆர் சாலையில் உள்ள கூவத்தூர் சொகுசு ரிசார்ட் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்களை சசிகலா நேரில் சந்தித்தார். பின்னர் ரிசார்ட்டில் இருந்து வெளியே வந்த சசிகலா செய்தியாளர்களிடம் பேசியபோது, 'ஆளுநர் முடிவுக்காக இன்று வரை காத்திருந்தோம், நாளை வேறு விதத்தில் போராடுவோம்' என்று கூறினார். மேலும் 'அதிமுக எம்.எல்.ஏக்கள் மன உறுதியுடன் உள்ளதாகவும், அதிமுகவில் பிளவை ஏற்படுத்தவே கவர்னர் காலதாமதம் செய்வதாகவும் கூறினார்.
இந்நிலையில் கூவத்தூர் அருகே உள்ள கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாகவும், மீடியாக்களின் தொந்தரவு காரணமாகவும் இன்று எம்.எல்.ஏக்கள் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் கெஸ்ட் ஹவுசுக்கு மாற்றப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த மருத்துவக்கல்லூரியின் கெஸ்ட் அவுசுக்கு பத்திரிகையாளர்கள் எளிதில் செல்ல முடியாது என்பதும், ஒருவேளை ஆளுனர் அழைத்தால் உடனே எம்.ஏ.க்களின் அணிவகுப்பு நடத்த வசதியாக இருக்கும் என்பதாலும் இந்த இடமாற்றம் நிகழ்வதாக சசிகலா அணி தரப்பு அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.