தினகரன் அணியில் 18 எம்.எல்.ஏக்கள்: விரைவில் சட்டமன்ற தேர்தலா?
- IndiaGlitz, [Tuesday,June 06 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்த அதிமுக, கட்சியின் பெயரையும், சின்னத்தையும் இழந்தது. இந்த நிலையில் சசிகலா அணியின் சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது தமிழக அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென தினகரன் அணி என புதிய அணி ஒன்று உருவாகியுள்ளது.
சமீபத்தில் ஜாமீன் பெற்று திகார் சிறையில் இருந்து வெளியே வந்த தினகரனுக்கு இதுவரை முன்னாள் அமைசர் செந்தில்பாலாஜி உள்பட 18 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக இருப்பதாகவும், இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது மெஜாரிட்டியை நிரூபித்த நிலையில் தற்போது 18 எம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக திரும்பியுள்ளதால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே தமிழத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தலுக்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.