மாநில முதல்வருக்கு வாழும் காலத்திலேயே கோவில் கட்டும் எம்எல்ஏ!!! பரபரப்பு தகவல்!!!

  • IndiaGlitz, [Thursday,August 06 2020]

 

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளும் கட்சி எம்எல்ஏவான தலாரி வெங்கட்ராவ் கோவில் கட்ட இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராகப் பொறுப்பேற்று கொண்டதில் இருந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். இதனால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற முதல்வராகவும் மாறியிருக்கிறார். இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பத்தை எந்த தீயச்சக்தியும் அண்டக்கூடாது எனவும் அவருடைய பெருமையை பறைச்சாற்றும் விதமாகவும் கோவில் ஒன்றை நிர்மாணித்து வருவதாக தலாரி வெங்கட்ராவ் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்தக் கோவில் ஆந்திராவின் மேற்கு கோதாவரி பகுதியில் உள்ள கோபாலபுரம் அடுத்த ராஜபாளையத்தில் அமையவிருக்கிறது. தற்போது அப்பகுதியில் அடிக்கல் நாட்டியிருப்பதாகவும் வெங்கட்ராவ் தெரிவித்து இருக்கிறார். வருங்கால சந்ததியினருக்கு ஜெகன் மோகன் ரெட்டியின் பெருமையையும் அவருடைய நலத் திட்டங்களைத் தெரியப்படுத்த வேண்டி கோவில் கட்ட முனைந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். பெரும்பாலும் மறைந்த தலைவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவது வழக்கம். ஆனால் வாழும் காலத்திலேயே ஒரு தலைவருக்கு பெருமைச் சேர்க்கும் விதமாக கோவில் கட்ட நினைப்பது குறித்து ஆந்திர மக்கள் தற்போது பெரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

திவாலாகி விடுவோம் போல… பாதுகாப்பு வேணும்… நிதிமன்றத்தை நாடியிருக்கும் பிரபல விமான நிறுவனம்!!!

அமெரிக்காவில் இயங்கிவரும் பிரபல விமான சேவை நிறுவனமான விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு விசித்திரமான மனு ஒன்றை அளித்து இருக்கிறது.

கொரோனாவில் இருந்து விடுபட்ட நூற்றுக்கு 90 சதவீதம் பேருக்கு இந்த குறைபாடு இருக்கு… பகீர் தகவல்!!!

கடந்த டிசம்பர் மாத இறுதியில் முதன்முதலாக வுஹான் மாகணத்தின் இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா பரவியதாகக் கூறப்படுகிறது.

லெபனான் போன்று சென்னைக்கும் ஆபத்தா??? அதிர்ச்சியை ஏற்படுத்தும் பகீர் தகவல்!!!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தால் இதுவரை 138 பேர் உயிரிழந்துள்ளனர்

காதில் இருந்த கம்மலை விற்று மகளுக்காக ஸ்மார்ட் போன் வாங்கிய தேவதாசிப்பெண்!!!

ஆந்திராவில் குழந்தைகளின் படிப்புக்காக தாலியைவிற்று டிவி வாங்கிய பெண்மணியைப் போல தற்போது கர்நாடகாவிலும் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

கொரோனா தொற்று இதயத்தையும் பதம் பார்க்குமா??? ஆய்வு மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!

பொதுவாக கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு நுரையீரல் மற்றும் சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.