500 ரூபாய்க்கு அன்லிமிட்டட் பிளான் இருக்கும்போது ரூ.7500 தொலைபேசி படி தேவையா?
- IndiaGlitz, [Wednesday,January 10 2018]
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு குறித்த மசோதா இன்று சட்டமன்றத்தில் நிறைவேறியது. இதன்படி எம்.எல்.ஏக்களுக்கு 100% ஊதிய உயர்வு கிடைக்கும். அதுமட்டுமின்றி எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்படும் மற்ற சலுகைகளும் உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக எம்.எல்.ஏக்களின் தொலைபேசி படி இதுவரை மாதம் ஒன்றுக்கு ரூ.5000 என இருந்த நிலையில் தற்போது அது ரூ.7500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு துறையினர் போட்டி போட்டுக்கொண்டு ரூ.500க்கு அன்லிமிடெட் பிளான்களை வழங்கி வரும் நிலையில் ரூ.7500 தொலைபேசி படி தேவையா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எம்.எல்.ஏக்களின் சம்பள உயர்வால் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.25,32,72,000 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் வரிப்பணம் மூலம் கிடைக்கும் வருவாயில் மக்களுக்காக திட்டங்களை நிறைவேற்றாமல் எம்.எல்.ஏக்களின் சம்பளத்தை உயர்த்துவது சரியா? என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.