ஊதிய உயர்வு கேட்காத எம்.எல்.ஏக்களுக்கு இன்று ஊதிய உயர்வு மசோதா தாக்கல்

  • IndiaGlitz, [Wednesday,January 10 2018]

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏழு நாட்களாக போராடி வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்காத நிலையில் இன்று ஊதிய உயர்வே கேட்காத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு தரும் மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த நிலையில் இன்று அந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது

இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுவிட்டால் எம்.எல்.ஏக்களின் சம்பளம் ரூ.55ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயாக அதிகரிக்கும். அதாவது ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ரூ.50 ஆயிரம் சம்பள உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அரியர்ஸ் தொகையுடன் சேர்த்து ஒவ்வொரு எம்.எல்.ஏவும் இனி மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுவர். மேலும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் ரூ.20 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெறுவர்.

ஒருசில ஆயிரம் ஊதிய உயர்வுக்காக போக்குவரத்து தொழிலாளர்கள் ஒருபக்கம் போராடி வரும் நிலையில் எம்.எல்.ஏக்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் உயரும் மசோதா இன்னொரு புறம் தாக்கல் செய்யப்படுவது பெரும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

More News

ஆதார் பாதுகாப்பு குளறுபடி: 5000 அதிகாரிகள் மீது நடவடிக்கை

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டை தேவை என்பதின் அவசியத்தை அறிவுறுத்திய மத்திய மாநில அரசுகள் அந்த ஆதார் அட்டையுடன் அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைக்க வலியுறுத்தியது.

ஜெ.தீபாவின் வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார்

நட்சத்திர கலைவிழா: அஜித் ஏன் வரவில்லை தெரியுமா?

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் மலேசியாவில் பிரமாண்டமான நட்சத்திர கலைவிழா நடைபெற்றது. கமல், ரஜினி உள்பட கோலிவுட்டின் முக்கிய நடிகர், நடிகைகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்

கல்லூரி மாணவி கண்முன்னே வெட்டி கொலை செய்யப்பட்ட தந்தை: சென்னையில் பயங்கரம்

சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஒருவரின் தந்தை நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு முதல்வர் ஆதரவு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி, 'தான் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார்.