தமிழக எம்.எல்.ஏ அடுத்து சினிமாவில் அடுத்த பதவி
Send us your feedback to audioarticles@vaarta.com
நகைச்சுவை நடிகர், நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர், தமிழக சட்டமன்றத்தின் எம்.எல்.ஏ என பிசியாக இருக்கும் நடிகர் கருணாஸ் தற்போது புதிய அவதாரமாக இசையமைப்பு பணியையும் ஆரம்பித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக், டுவிட்டருக்கு அடுத்து பிரபலமாக இருப்பது வாட்ஸ் அப். இந்த வாட்ஸ் அப்'பை மையமாக வைத்து ஒரு படம் உருவாகவுள்ளது. இந்த படத்திற்குத்தான் கருணாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்திற்கு 'பகிரி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 'பகிரி' என்றால் 'வாட்ஸ் அப்' என்று அர்த்தமாம்.
தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த பிரபு ரண்வீரன் நாயகனாக நடிக்கவுள்ள இந்த படத்தில் ஆந்திர அழகி ஷர்வியா நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் ரவிமரியா, ஏ.வெங்கடேசன், சரவண சுப்பையா, மாரிமுத்து, டி.பி. கஜேந்திரன், கே.ராஜன், பாலசேகரன் உள்பட பல இயக்குநர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை கார்வண்ணன் என்பவர் இயக்குகிறார்.
சென்னைக்கு வேலை தேடி வரும் ஒரு இளைஞனுக்கு ஏற்படும் அனுபவங்களை நகைச்சுவையாக இந்த படத்தில் கூறவிருப்பதாக இயக்குனர் கார்வண்ணன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com