'கெத்து' படத்தின் சிறப்பு காட்சியில் முன்னாள் துணை முதல்வர்
Send us your feedback to audioarticles@vaarta.com
நகைச்சுவை நடிகர் சந்தானத்துடன் இணைந்து 'ஒரு கல் ஒரு கண்ணாடி', இது கதிர்வேலன் காதல்' மற்றும் 'நண்பேண்டா' ஆகிய படங்களில் நடித்த உதயநிதி ஸ்டாலின் முதன்முதலாக சந்தானம் இல்லாமல் ஆக்சன் ஹீரோவாக நடித்துள்ள படம் 'கெத்து'. திருக்குமரன் இயக்கியுள்ள இந்தபடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கான முன்பதிவும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தனது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக உதயநிதி ஸ்டாலின் 'கெத்து' படத்தின் சிறப்புக்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த காட்சிக்கு முன்னாள் துணை முதல்வரும் உதயநிதியின் தந்தையுமான மு.க.ஸ்டாலின் உள்பட பலர் வருகை தந்து 'கெத்து' படத்தை பார்த்து ரசித்தனர்.
உதயநிதிக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடித்துள்ள இந்த படத்தில் விக்ராந்த், சத்யராஜ், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு உதயநிதியின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments