மெர்சலுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்த மு.க.ஸ்டாலின்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு எந்த நேரத்திற்கு தமிழிசை செளந்திரராஜன் எதிர்ப்பு தெரிவித்தாரோ தெரியவில்லை, தமிழகத்தில் இருந்த ஒருசில செல்வாக்கும் அந்த கட்சிக்கு தற்போது இல்லாமல் போய்விட்டது. அஜித், விஜய் ரசிகர்களைகூட இந்த பிரச்சனை ஒன்றுசேர வைக்கும் அதிசயத்தை நிகழ்த்திவிட்டது என்றால் பார்த்து கொள்ளுங்கள்
விஜய்யை பிடிக்காதவர்கள் கூட இந்த விஷயத்தில் பாஜகவினர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் மெர்சல் படத்திற்கு ஆதரவாக ஜெ.அன்பழகன் உள்பட ஒருசில திமுக பிரமுகர்கள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுகவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் 'மெர்சல்' படத்தின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: பேச்சுரிமைக்கும் கலையுலக சுதந்திரத்திற்கும் திமுக என்றுமே ஆதரவாக இருக்கும். விமர்சனங்களை அடக்க பாஜக முயற்சிப்பது ஜனநாயக கொள்கைகளுக்கு விரோதனமானது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டுவீட்டை ஆயிரக்கணக்கானோர் லைக்ஸ் செய்தும், ரீடுவீட் செய்தும் வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com