ரஜினியின் தலைகீழ் பார்வை நாட்டுக்கு நல்லதல்ல: மு.க.ஸ்டாலின்
- IndiaGlitz, [Sunday,January 28 2018]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் முழுநேர அரசியலில் குதிக்கவுள்ளதாக அறிவித்துவிட்டு அதற்கான ஆரம்பகட்ட பணிகளை கவனித்து வரும் நிலையில் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும் கமல்ஹாசனின் பகுத்தறிவு அரசியலுக்கும் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: ரஜினி, கமல் இரண்டு பேருமே தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பர்கள். அவர்கள் இருவரும் அரசியல். களத்துக்கு வரும்போது பார்க்கலாம்' என்று கூறினார்.
மேலும் ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து அவர் கூறியபோது, 'ஆன்மிகத்தை நிறுவனமாக்க முற்படுறப்போதான் மதம் பிறக்குது. நிறுவனப்படுத்தப்பட்ட மதம் ஆட்சியதிகாரத்தைத் தன் கையில வெச்சிக்கிட்டு மக்களை வதைக்கிறப்போதான் மதச்சார்பின்மைங்கிற தத்துவம் பிறக்குது. ஆன்மிகத்தைத் தனியாகவும் அரசியலைத் தனியாகவும் பார்க்க அது நமக்கு கத்து தருது. ரஜினி மறுபடி தலைகீழாக்கப் பார்க்கிறார். நாட்டுக்கு அது நல்லது இல்லை!