திமுக தலைவரானார் ஸ்டாலின்: பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள் 

  • IndiaGlitz, [Tuesday,August 28 2018]

திமுக தலைவராக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் இருந்த கருணாநிதி உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மு.க.ஸ்டாலினை தலைவராக தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை திமுக பொதுச்செயலாளர் சற்றுமுன் வாசிக்க திமுக தொண்டர்களின் பலத்த கரகோசத்திற்கு இடையே திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.

திமுகவின் இரண்டாவது தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதை அறிந்தவுடன் அண்ணா அறிவாலயம் முன் கூடியிருந்த திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். இதனால் தேனாம்பேட்டை பகுதியே ஒரே பட்டாசுமயமாக உள்ளது. திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு க.அன்பழகன் உள்பட முன்னணி தலைவர்கள் வாழ்த்து கூறினர். அதேபோல் திமுக பொருளாளராக துரைமுருகன் அவர்கள் முறைப்படி அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக திமுக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கருணாநிதி மறைந்த அதிர்ச்சியில் பலியான 248 திமுக தொண்டர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி, வாஜ்பாய் மறைவிற்கு இரங்கல், கருணாநிதி உள்பட திமுகவினர் மறைவிற்கு இரங்கல், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவிற்கு இரங்கல் என பல தீர்மானங்கள் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

விஜய்-ஜிவி பிரகாஷ் இணையும் படத்தின் டைட்டில்

பிரபல இயக்குனர் விஜய் இயக்கிய 'லக்ஷ்மி' திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆன நிலையில் அவர் அடுத்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மும்தாஜ் குடும்பத்தினர்: தொடர்கிறது செண்டிமெண்ட்

கடந்த சில நாட்களாக மகத்தால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆக்ரோஷமாகவும் அருவருப்பாகவும் இருந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று மகத்தின் வெளியேற்றத்திற்கு

இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள்

தனுஷ் நடித்து வரும் 'வடசென்னை' படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் வெற்றிமாறன், அந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியில் பிசியாக உள்ளார்.

வெளியே வந்த மகத்தின் கன்னத்தில் ஓங்கி அறைந்த சிம்பு

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் அதிக வெறுப்பை சம்பாதித்த மகத், நேற்று ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். மகத்தின் வெளியேறியதால் உண்டான சந்தோஷத்தை

போட்டியின்றி திமுக தலைவராகும் மு.க.ஸ்டாலின்: திமுக தொண்டர்கள் உற்சாகம்

திமுக தலைவராக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் இருந்த கருணாநிதி சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து திமுகவின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டது