அப்போவே எங்க தாத்தா இவ்வளவு சம்பளம் வாங்குனாரு: தியாகராஜ பாகவதர் பேரனின் பேட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்கே தியாகராஜ பாகவதர் என்பதும் அவர் நடித்த ’ஹரிதாஸ்’ என்ற திரைப்படம் மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக ஒரே திரையரங்கில் ஓடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 1940 ஆம் ஆண்டு காலத்திலேயே ஒரு படத்திற்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர் எம்கே தியாகராஜ பாகவதர் மற்றும் அது இன்றைய மதிப்பில் பல கோடிக்கு சமம் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் தியாகராஜ பாகவதரின் பேரன் சாய்ராம் என்பவர் வறுமையில் இருப்பதை கேள்விப்பட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அவருக்கு ரூ 5 லட்சம் நிதி உதவி மற்றும் வீட்டு வசதி துறையில் ஒரு வீடு ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் நமக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் சாய்ராம், தனது தாத்தா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக தியாகராஜ பாகவதர் இருந்தது, அப்பவே ஒரு லட்சம் ஒரு படத்திற்கு சம்பளம் வாங்கியது, பத்திரிகையாளர் ஒருவரின் கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றது, சிவாஜி, விகே ராமசாமி உள்ளிட்டோர் தனக்கு உதவி செய்தது உள்பட பல விஷயங்களை அவர் இந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார். இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ:
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments