தனுஷ், விஜய்சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த முக ஸ்டாலின்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன என்பதும் அதில் தமிழ் திரைப்படங்கள் பல விருதுகளை அள்ளியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அசுரன் படத்தில் சிறப்பாக நடித்த தனுசுக்கு சிறந்த நடிகருக்கான விருது, சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறப்பாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது, அசுரன் படத்தை சிறப்பாக இயக்கிய வெற்றிமாறன் அவர்களுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது, விஸ்வாசம் படத்தில் சிறப்பாக இசையமைத்த டி.இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது ஆகியவை கிடைத்தது.
மேலும் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு இரண்டு விருதுகளும் கேடி என்ற திரைப்படத்தில் நடித்த நாக்விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதும் கிடைத்தது. எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை அதிக தேசிய விருதுகள் தமிழ் திரைப்படங்களுக்கு கிடைத்துள்ளது தமிழ் திரை உலகிற்கே பெருமையான ஒன்றாகும்.
இந்த நிலையில் தேசிய விருது பெற்ற தமிழ் கலைஞர்களுக்கு திரையுலகினர் அரசியல்வாதிகள் உள்பட பல்வேறு தரப்பின் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டில் கூறியிருப்பதாவது:
தேசிய விருது பெறும் தனுஷ், விஜய்சேதுபதி, பார்த்திபன், இமான், வெற்றிமாறன் ஆகியோர்களுக்கு அன்புநிறை வாழ்த்துகள்! அர்ப்பணிப்புடன் - முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது; மகிழ்கிறேன்! மென்மேலும் சிறப்புகளைப் பெறுக!
தேசிய விருது பெறும் @dhanushkraja @VijaySethuOffl @rparthiepan @immancomposer ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) March 23, 2021
அசுரன் @VetriMaaran-க்கு அன்புநிறை வாழ்த்துகள்!
அர்ப்பணிப்புடன் - முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது; மகிழ்கிறேன்!
மென்மேலும் சிறப்புகளைப் பெறுக! pic.twitter.com/1tFK3RPkRC
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments