திரைத்துறைக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் குரல் கொடுத்த ஸ்டாலின்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 1ஆம் தேதி முதல் 'ஒரே நாடு ஒரே வரி' என்ற முழகத்துடன் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்தவுடன் மாநில அரசின் வரிகள் ரத்தாகும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஜிஎஸ்டி வரி வந்த பின்னரும் தமிழகத்தில் மாநில அரசின் வரி தொடர்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக திரைத்துறையினர் ஜிஎஸ்டி வரி 28% மற்றும் மாநில அரசின் வரி 30% மற்றும் இதர வரிகள் என 60%க்கும் மேலாக வரிகட்ட வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் இரட்டை வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நான்கு நாட்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. திரையுலக பிரமுகர்கள் முதல்வர் பழனிச்சாமி உள்பட அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் இந்த பிரச்சனை முடிவுக்கு வரவில்லை.
இந்த நிலையில் முதல்முறையாக திரைத்துறையினர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். "திரைத்துறைக்கு கேளிக்கை வரி விதிப்பை ஏற்க முடியாது. கேரளாவில் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தவுடன் திரைத்துறையினரின் வேண்டுகோளை ஏற்று கேளிக்கை வரியை கேரள அரசு ரத்து செய்தது. அதுபோல் தமிழக அரசும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலினுக்கு பதிலளித்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "திரைத்துறைக்கு விதிக்கப்பட்டுள்ளதை இரட்டை வரியாக கருத முடியாது. ஜிஎஸ்டி அமல்படுத்தவதற்கு முன்னதாகவே கேளிக்கை வரி திரைத்துறையிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments