வரும் 7 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 2) ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இதில் திமுக கூட்டணி அறுதிப்பெரும்பான்மை இடத்தில் வெற்றிப்பெற்றுள்ளது. இதையொட்டி திமுக 10 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க இருக்கிறது.

தமிழகத்தில் 118 இடங்களில் வெற்றிப்பெற்றால் ஆட்சியைப் பிடிக்கலாம் எனும் நிலை இருக்கும்போது திமுக கூட்டணி இத்தேர்தலில் 159 இடங்களில் வெற்றி ஆட்சியைப் பிடித்து இருக்கிறது. இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.

தற்போது கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் பெற்று இருப்பதால் பதவியேற்பு விழா மிக எளிமையாக இருக்கும் என மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதோடு நாளை வெற்றிப்பெற்ற தொகுதி வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் முதல்வர் பதவிக்கான பதியேற்பு விழா வரும் மே 7 ஆம் தேதி நடைபெற இருக்கிறது என்றும் இந்த விழா ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

More News

கமல் தோல்வி குறித்து தனது பாணியில் டுவிட் போட்ட பார்த்திபன்!

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.

குமரியில் வெற்றி பெற்ற விஜய் வசந்த்: குவியும் திரையுலகினர்களின் வாழ்த்துக்கள்!

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் காலியாக இருந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே

முதல்வர் பொறுப்பேற்றதும் ஸ்டாலின் போடப்போகும் முதல் கையெழுத்து என்ன?

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் முதல்முறையாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்

தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சி அடையட்டும்: திமுக கூட்டணிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி எதிர்க்கட்சியாக இருக்க போகிறது

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தோல்வி: வாக்கு வித்தியாசம் இவ்வளவுதானா?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் அவர் சுமார்