WAR ROOMஇல் இருந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!
- IndiaGlitz, [Saturday,May 15 2021]
கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள டிஎம்எஸ் வணிக வளாகத்தில் WAR ROOM எனப்படும் கட்டளை மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 11 மணிக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
அப்போது அங்குள்ள அதிகாரிகளுடன் கொரோனா மையத்தின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். பின்னர் பொதுமக்கள் உதவிக்காக அழைப்பு விடுக்கும் பிரிவுக்கும் முதல்வர் சென்றுள்ளார். அங்கு ஊழியர்கள் பலர் பொதுமக்கள் உதவிக்காக அழைக்கும் செல்போன் கால்களில் பேசிக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் பொதுமக்களிடம் இருந்து வந்த ஒரு செல்போன் காலை முதல்வரே ஏற்றுள்ளார்.
மேலும் அழைப்பு அந்த நபரிடம் நான் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிய அவர் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கட்டளை மையத்தில் தடுப்பு பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
இந்த ஆய்வின்போது முதல்வரின் தனிச் செயலாளர்கள் உதயசந்திரன், உமாநாத் மற்றும் தேசிய மக்கள் நல்வாழ்வு திட்ட இயக்குநர் தாரேஸ் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் கட்டளை மையத்தில் தான் ஆய்வு செய்தது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில் தெரித்ததோடு வீடியோவையும் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் படுக்கைகள் - மருந்து கையிருப்பு - உயிர்வளி ஆகிய அனைத்தையும் கண்காணித்து ஒழுங்கு செய்யும் கொரோனா கட்டளை மையத்தை (War Room) பார்வையிட்டேன்.#Covid19 கட்டுப்படுத்தலில் தமிழகத்தில் நிலவி வந்த
— M.K.Stalin (@mkstalin) May 14, 2021
குழப்பங்களை சீராக்கி திறனுடன் கையாளும் பாதையில் வெகு விரைவாக பயணிக்கிறோம். pic.twitter.com/0O2URuDTiv