அன்னை சோனியா காந்தி பிரதமரா! நீங்களுமா ஸ்டாலின்?

தேர்தல் நேரத்தில் அரசியல் தலைவர்கள் பலர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒருசிலர் வாய்தவறி தவறான தகவல்களை அளித்து வருவதும், அவ்வாறு தலைவர்கள் பேசும் பேச்சை நெட்டிசன்கள் கலாய்த்து வருவதும் தெரிந்ததே.

இன்று காலை கூட 'புல்வாமா தாக்குதலை நடத்தியது பிரதமர் மோடி என்று வாய் தவறி கூறிய பிரேமலதாவையும், எடப்பாடி தலைமையிலான திமுக ஆட்சி என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியதையும் நெட்டிசன்கள் தொடர்ந்து கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் '02.07.2005 அன்று அன்னை சோனியா காந்தி பிரதமராக இருந்தபோது' என்று பேசியுள்ளார். சோனியா காந்தி எப்போது பிரதமராக இருந்தார்? என்றும் 'நீங்களுமா ஸ்டாலின்' என்றும் நெட்டிசன்கள் கிண்டலுடன் கேட்டு வருகின்றனர். இவ்வளவிற்கு இதனை முக ஸ்டாலின் தனது கையில் உள்ள குறிப்புகளை பார்த்தே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கோவை சிறுமி கொலை: பெற்றோருக்கு ஆறுதல் கூறிய கமல்ஹாசன்

கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது

'நம்ம ஊரு தொழிலாளிகள்': விஜய்யின் பாசம்

பெரிய ஸ்டார்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் நடைபெறுவது வழக்கம். ஏனெனில் படப்பிடிப்பு நடக்கும்போது

ரஜினி படத்தை ஆரம்பிக்கும் முன் ஏ.ஆர்.முருகதாஸ் சென்ற இடம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்திலும் நடித்து முடித்தவுடன் திருப்பதி சென்று அந்த படத்தின் வெற்றிக்காக வழிபடுவதுண்டு. அந்த வகையில்

கணவனை கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் கணவரை கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சரவணபவன் ராஜாகோபால் வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

கொலை வழக்கு ஒன்றில் சரவணபவன் உணவக உரிமையாளர் ராஜகோபாலுக்கு சென்னை ஐகோர்ட் வழங்கிய ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட் இன்று உறுதி செய்துள்ளது.