மணிரத்னத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆதரவு!
- IndiaGlitz, [Saturday,October 05 2019]
மணிரத்னம் உள்பட 49 திரையுலக பிரபலங்கள் நாட்டின் நிலை குறித்து விரிவாக ஒரு கடிதம் எழுதி அதில் கையெழுத்திட்டு பிரதமருக்கு அனுப்பிய நிலையில் இந்த கடிதம் காரணமாக 49 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. இதனை கண்டித்து பல திரையுலக பிரமுகர்களும், அரசியல்வாதிகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியதாவது:
மணிரத்னம் உள்ளிட்டோர் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டுள்ளது, நாம் ஜனநாயக நாட்டில் வசிக்கிறோமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிறுபான்மையினர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதை கடிதம் மூலம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்ற 49 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்கு போடப்பட்டுள்ளது என்பது மிகப்பெரிய கொடுமை’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.