மு.க.ஸ்டாலின் திடீர் பதவி விலகல்
- IndiaGlitz, [Friday,January 06 2017]
நேற்று முன் தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடிய திமுக பொதுக்குழுவில் திமுகவின் செயல் தலைவராக புதிய பொறுப்பினை மு.க.ஸ்டாலின் ஏற்று கொண்டார். மேலும் அவர் ஏற்கனவே வகித்து வந்த திமுக பொருளாளர் பதவியிலும் நீட்டிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் நீண்டகாலமாக வகித்து வந்த இன்னொரு பதவியான திமுக இளைஞரணி செயலாளர் பதவியில் இருந்து இன்று அவர் விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக இந்த பதவியில் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். மேலும் இளைஞர் அணி இணைச் செயலாளராக சுபா.சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அன்பழகன் அறிவித்துள்ளார்.