முக ஸ்டாலின், ரஜினிகாந்த், விஜய் ட்விட்டர் கணக்குகளுக்கு திடீர் சிக்கல்.. தப்பித்த கமல், சூர்யா..!
- IndiaGlitz, [Friday,April 21 2023]
தமிழக முதல்வர் முக ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் இருந்த ப்ளூடிக் நீக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாங்கிய நிலையில் பல மாற்றங்களை செய்தார் என்பதும் குறிப்பாக ப்ளூடிக் கணக்கு வைத்திருப்பவர்கள் சந்தா கட்ட வேண்டும் என்ற முறையை கொண்டு வந்தார் என்பதும் தெரிந்ததே.
ப்ளூடிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏப்ரல் 20-ம் தேதிக்குள் சந்தா கட்டணம் செலுத்தவில்லை என்றால் அவர்களுடைய ப்ளூடிக் நீக்கப்படும் என்றும் ஏப்ரல் 12ஆம் தேதி எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென முதலமைச்சர் முக ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் இருந்து ப்ளூடிக் நீக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின், ரஜினிகாந்த், விஜய், சிம்பு, ரோகித் சர்மா, விராட் கோலி, தோனி உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் இருந்த ப்ளூடிக் நீக்கப்பட்டுள்ளது ஆனால் அதே நேரத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், நடிகர் சூர்யா, நடிகர் மகேஷ்பாபு உள்ளிட்டோர் ட்விட்டர் கணக்குகளில் தொடர்ந்து ப்ளூடிக் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை குஷ்பு தனது ட்விட்டர் கணக்கில் இருந்த ப்ளூடிக் நீக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளார். பிரபலங்களின் ட்விடட்ர் கணக்குகளில் இருந்த ப்ளூடிக் நீக்கப்பட்டாலும் அவர்கள் சந்தா செலுத்தினால் மீண்டும் அவர்களுக்கு ப்ளூடிக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.