close
Choose your channels

'செவாலியே' விருது பெற்ற கமல்ஹாசனுக்கு பிரபல அரசியல் தலைவர் வாழ்த்து

Monday, August 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் கோலிவுட் திரையுலகின் பொக்கிஷம் என்பதும், அவரால் திரையுலகம் மட்டுமின்றி நாடே பெருமை அடைந்துள்ளது என்பதையும் ஏற்கனவே பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பிரான்ஸ் அரசின் உயர்ந்த விருதான செவாலியே விருதை பெற்றுள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகனும் பிரபல அரசியல் தலைவருமான மு.க.ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து அறிக்கையில் கூறியிருபதாவது:
கமல்ஹாசனுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரையுலகில் கடின உழைப்பு, கலைத்திறமை ஆகியவற்றால் சர்வதேச அளவிலான செவாலியர் விருது பெற்றதன் மூலம் தமிழ் திரையுலகத்திற்கும், ஏன் ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்திற்குமே நமது கமலஹாசன் அவர்கள் பெருமை சேர்த்திருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்குப் பிறகு செவாலியர் விருது பெறும் தமிழ் நடிகர் கமல்ஹாசன் என்பது எனக்கு மட்டுமல்ல, தமிழ் திரையுலகில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.
"களத்தூர் கண்ணாம்மா" படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, திரைத்துறையில் கடந்த அரை நூற்றாண்டுகளாக கொடி கட்டிப் பறந்து வரும் அவர் இதுவரை பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் கலைத்துறையினருக்கு வழங்கப்படும் பல்வேறு தேசிய, மாநில விருதுகளையும் பெற்றிருக்கிறார். பிலிம் பேர் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
அவரது சாதனைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டுவது போல் கிடைத்திருக்கும் பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருது திரையுலக வாழ்வில் அவருக்கு மிக முக்கியமான திருப்பு முனையாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நடிகர், இயக்குநர், திரைக் கதாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடாலாசிரியர் என சினிமாவில் பன்முகத் திறமையாளரான நடிகர் கமல்ஹாசன் அவர்கள் மேலும் பல விருதுகளை வாங்கிக் குவிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment