ரஜினி, கமலுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

  • IndiaGlitz, [Thursday,December 06 2018]

முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைந்த பின்னர் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகவும், அந்த வெற்றிடத்தை நிரப்ப ரஜினி மற்றும் கமல் அரசியலில் குதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும், ரஜினி, கமல் அரசியல் எண்ட்ரி அதற்கு தடையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் வரும் 16ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கும், தமிழக அரசியல் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமல் ஆகிய இருவருக்கும் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

ரஜினி, கமல் ஆகிய இருவருக்கும் திமுக குறித்து கருத்துவேறுபாடு இருந்தாலும், இருவருமே மு.கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதால் இந்த விழாவில் இருவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.