அசுரன் - படம் அல்ல பாடம்: முக ஸ்டாலின் பாராட்டு
- IndiaGlitz, [Thursday,October 17 2019]
தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், கலைபுலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகிய ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படம் என அறிவிக்கப்பட்டது.
இந்தப் படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ள நிலையில் இந்த படத்திற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு ’அசுரன்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்று நேற்று திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்த்த முக ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது: அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷூக்கும் எனது பாராட்டுகள்’ என்று தெரிவித்துள்ளார்.
மு க ஸ்டாலின் அவர்களின் இந்த பாராட்டை அடுத்து படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர் இந்த படத்திற்கு பின்னர் பல படங்கள் வெளியாகி போதிலும் இந்த படத்தின் வசூல் குறையாமல் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#Asuran - படம் மட்டுமல்ல பாடம்!
— M.K.Stalin (@mkstalin) October 17, 2019
பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!
கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் @VetriMaaran-க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் @dhanushkraja-வுக்கும் பாராட்டுகள் pic.twitter.com/i6PYyRTPfV