தமிழிசை முன் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட இளம்பெண் கைது
- IndiaGlitz, [Tuesday,September 04 2018]
நேற்று சென்னையில் இருந்து தூத்துகுடி வந்த விமானத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பயணம் செய்து கொண்டிருந்தபோது விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த சோபியா என்ற இளம்பெண் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டார். இதனால் தமிழிசைக்கும் சோபியாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தமிழிசை கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளில் சோபியா மீது போலீசார் வழக்கு தொடர்ந்து அவரை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து சோபியா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சோபியாவின் தந்தை, தமிழிசை மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சோபியா கைது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைது நடவடிக்கை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜகவுக்கு எதிராக சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்! “பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” என்று மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் இதுநாள் வரை கைது செய்யப்படாமல் இருக்கும் நிலையில் பாஜக குறித்து பேசிய ஒரு பெண்ணை அதிரடியாக போலீசார் கைது செய்தது நியாயமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) September 3, 2018
அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?
நானும் சொல்கின்றேன்!
“பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” https://t.co/JoPajdrSW5