சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த முக ஸ்டாலின்!

  • IndiaGlitz, [Thursday,December 12 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்கள் மூலமும் நேரிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சமூக வலைதளங்களான பேஸ்புக் ட்விட்டர் போன்றவற்றில் ரஜினியின் பிறந்தநாள் குறித்த ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இதயமார்ந்த, பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் - மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்