நகைக்கடன் தள்ளுபடி குறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 5 பவுன் வரையிலான கூட்டுறவு நகைக்கடன் பெற்றவர்களில் தகுதியான நபர்களுக்கு அதாவது உரிய ஏழைகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

சட்டமன்றத் தேர்தலின்போது திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுன் உட்பட்ட நகைகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்து இருந்தது. அதன்படி கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேவையான உதவியை அரசு செய்யும் என்றும் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தகுதியானவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இதனால் தமிழக அரசுக்கு 6,000 கோடி கூடுதல் செலவாகும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படுவதில் குளறுபடிகள் ஏற்படாமல் இருக்க கடந்த ஒரு மாதமாக பகுப்பாய்வுகள் நடத்தப்பட்டதாகவும் இதற்காக 51 தரவுகள் சரிபார்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் நகைக்கடன் பெயர், கூட்டுறவு சங்க விவரம், கணக்கு எண், ஆதார் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு உள்ளது என்றும் உரிய ஏழைகள் மட்டுமே கடன் தள்ளுபடிக்கான பயனை பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு பயிர்க்கடன் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சங்கங்கள் மீது உரிய நடிவக்கையை அரசு மேற்கொள்ளும். இதுபோன்ற தவறுகள் நகைக்கடன் தள்ளுபடியில் நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலின்போது திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுன் உட்பட்ட நகைகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்து இருந்தது. அதன்படி கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேவையான உதவியை அரசு செய்யும் என்றும் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தகுதியானவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதன்படி அரசுக்கு 6,000 கோடி கூடுதல் செலவாகும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

More News

12 ஆண்டுகளுக்கு பின் அஜித்துடன் இணைந்த பிரபல நடிகர்: வைரல் புகைப்படம்!

அஜித் நடித்த 'ஏகன்' என்ற திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் 12 ஆண்டுகளுக்குப் பின் அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அரசுப்பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு!

அரசு பணி நியமனங்களில் பெண்களுக்காகத் தற்போது வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு அளவான 30% இடஒதுக்கீடு இனி 40%

உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பதவி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகரும், திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பதவி ஒன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிச்சயதார்த்தத்தை அதிகாரபூர்வமாக அறிவித்த விஜய், சூர்யா பட நடிகர்

தளபதி விஜய் நடித்த 'துப்பாக்கி' சூர்யா நடித்த 'அஞ்சான்' உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் வித்யூத் ஜமால். இவர் பேஷன் டிசைனர் நந்திதா என்பவரை கடந்த

ஷங்கர் மகள் அதிதி ஷங்கரின் அட்டகாசமான ராம்ப்வாக்: வைரல் வீடியோ

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் சமீபத்தில் நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டார். சூர்யா - ஜோதிகா தயாரிப்பில்