நகைக்கடன் தள்ளுபடி குறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் 5 பவுன் வரையிலான கூட்டுறவு நகைக்கடன் பெற்றவர்களில் தகுதியான நபர்களுக்கு அதாவது உரிய ஏழைகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
சட்டமன்றத் தேர்தலின்போது திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுன் உட்பட்ட நகைகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்து இருந்தது. அதன்படி கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேவையான உதவியை அரசு செய்யும் என்றும் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தகுதியானவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இதனால் தமிழக அரசுக்கு 6,000 கோடி கூடுதல் செலவாகும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படுவதில் குளறுபடிகள் ஏற்படாமல் இருக்க கடந்த ஒரு மாதமாக பகுப்பாய்வுகள் நடத்தப்பட்டதாகவும் இதற்காக 51 தரவுகள் சரிபார்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் நகைக்கடன் பெயர், கூட்டுறவு சங்க விவரம், கணக்கு எண், ஆதார் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு உள்ளது என்றும் உரிய ஏழைகள் மட்டுமே கடன் தள்ளுபடிக்கான பயனை பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு பயிர்க்கடன் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சங்கங்கள் மீது உரிய நடிவக்கையை அரசு மேற்கொள்ளும். இதுபோன்ற தவறுகள் நகைக்கடன் தள்ளுபடியில் நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலின்போது திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுன் உட்பட்ட நகைகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்து இருந்தது. அதன்படி கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேவையான உதவியை அரசு செய்யும் என்றும் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தகுதியானவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதன்படி அரசுக்கு 6,000 கோடி கூடுதல் செலவாகும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout