தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மு.க.ஸ்டாலின்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீட் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 45 வயதிற்கு கீழ் உள்ள நோய் மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிரதமர், குடியரசுதலைவர் மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர்.
தற்போது அந்த வகையில் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொரோனா தடுப்பூசியை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார். அதேபோல எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள காவேரி தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர்.
இவர்களைத் தவிர துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மநீம கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் போன்றோர் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout