எங்க கல்யாணத்துல எங்களுக்கே சாப்பாடு கிடைக்கல - மு.க. முத்துவின் மனைவி சொன்ன சுவாரஸ்ய தகவல்.

  • IndiaGlitz, [Monday,April 29 2024]

பின்னணி பாடகர் இசை சித்தர் சி.எஸ். ஜெயராமன் அவர்களின் மகளும் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் மகன் மு.க முத்துவின் மனைவியுமான சிவகாமசுந்தரி அவர்கள் IndiaGlitz-க்கு அளித்த பேட்டியில், எனது திருமணம் மிக பிரம்மாண்டமாக ஆபிட்ஸ்பரியில் நடந்தது.

எங்களது திருமணத்திற்கு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அன்றைய கவர்னர் மற்றும் ஜெயில் சிங் அச்சமயத்தில் வெள்ளி வேலை படத்தில் அறிமுகமாக இருந்த ஜெயலலிதா அவர்கள் நடிகை கே.ஆர். விஜயா மற்றும் பலர் வந்திருந்தனர். கல்யாணத்தின் முதல் நாள் நடிகர் திலகம், சிவாஜி கணேசன் அவர்கள் வந்திருந்து என்னுடன் போட்டோ எல்லாம் எடுத்துக் கொண்டு சென்றார்கள்.

மறுநாளும் திருமணத்திற்கு வந்தார் திருமணத்தில் அதிகமான கூட்டம் இருந்தது. மணமக்களாகிய எங்களுக்கே சாப்பாடு இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவிற்கு கூட்டம் வந்தது. எனக்கும் தலைவரின் மகள் செல்வி அவர்களுக்கும் ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது. எனது தந்தை சி.எஸ். ஜெயராமன் அவர்கள் ஒருநாள் ரிக்கார்டிங் தியேட்டருக்கு வரும்போது ஒரு பெண் வெளியே நின்று கொண்டிருந்தாள் என்னவென்று விசாரித்த போது அவர்கள் எனது பெயர் ஜானகி பாடல் பாட வந்தேன் வாய்ப்பு இல்லை படத்தில் அன்பாலே பேசிய என் அறிவு செல்வம் தங்கம் என்று பாடல் பாடுகிறேன். அதற்கு ஒரு ஹம்மிங் வாய்ஸ் வேண்டும் இந்த பெண்ணுக்கு மொழி தெரியாவிட்டாலும் ஹம்மிங் மட்டும் கொடுக்கச் சொல்லுங்கள் என்று அறிமுகப்படுத்தினார் அதுதான் எஸ் ஜானகி.

தமிழில் கொடுத்த முதல் ஹம்மிங். எனது தந்தை சி.எஸ்.ஜெயராமன் அவர்களை பார்க்க வருகின்ற அனைவரையும் முதலில் சாப்பிட்டீர்களா என்று கேட்பார். எங்கள் வீட்டில் எப்பொழுதும் வருகின்ற அனைவருக்கும் சாப்பாடு செய்யப்பட்டு கொண்டே இருக்கும். இதற்கென்று இரண்டு வேலைக்காரர்கள் இருந்தார்கள்.