சென்னை திரும்புவது குறித்து ரஜினி கூறியது என்ன? தொலைபேசியில் பேசிய முக அழகிரி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நேற்று ஒரு அறிக்கையும், இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது என்பதும் அந்த அறிக்கைகளில் நேற்றைவிட இன்று ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும் அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது இன்று மாலை முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ரஜினியை நேரில் பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ள நிலையில் தொலைபேசி மூலம் முக்கிய பிரமுகர்கள் அவருடன் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் ரஜினியிடம் தொலைபேசியில் பேசி உடல் நலம் விசாரித்த நிலையில் இன்று முன்னாள் திமுக மத்திய அமைச்சர் முக அழகிரி அவர்கள் தொலைபேசி மூலம் ரஜினியிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது ’ரஜினிகாந்த் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாளில் சென்னை திரும்புவேன் என தன்னிடம் கூறியதாக முக அழகிரி தெரிவித்துள்ளார். ரஜினி சென்னை திரும்புவது குறித்த தகவலை அளித்த முக அழகிரி அவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

More News

மூணு வாரம் தான் இருக்குது: இன்னும் உணர மாட்டேங்குறாங்க: கமல்ஹாசன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிகட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் இன்று 83வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இன்னும் 17 நாட்களில் முடிவடைய போகிறது

எல்லை மீறிய ரசிகர்கள்: அர்ச்சனா எடுத்த அதிர்ச்சி முடிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய அர்ச்சனா, வீட்டிற்கு வந்து முதல் வாரத்தில் இருந்து அனைத்து எபிசோடுகளையும் பார்த்திருப்பார் என தெரிகிறது. சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றிய

2021 இல் என்ன நடக்கும்??? கொரோனாவை கணித்த பாபா வங்காவின் கருத்து என்ன???

ஒட்டுமொத்த உலகத்திற்கும் 2020 ஆம் ஆண்டு ஒரு கெடுங்காலமாக மாறிவிட்டது. கொரோனா பரவல்

8 நாடுகளில் புதியவகை கொரோனா வைரஸ்??? இளம் வயதினரை அதிகம் பாதிக்குமா???

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் 70% வேகமாகப் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தோற்றம் பெற்றதாகப் பரபரப்பு தகவல் வெளியாகியது.

நேற்றைவிட இன்று நலமாக உள்ளார்: ரஜினி குறித்து அப்பல்லோ அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரத்த அழுத்தம் மாற்றம் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்