மிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை!!!

  • IndiaGlitz, [Saturday,October 24 2020]

 

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்துப் பள்ளி கல்லூரிகளும் இயங்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பொருளதார முடக்கம், மக்களின் இயல்பு வாழ்க்கை போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் படிப்படியாக ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டன.

இதனால் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளைத் திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளுக்கு தடை நீடிக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் தமிழகத்தில் இன்னும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி மிசோரம் மாநிலத்தில் பள்ளி, கல்லரிகளை திறப்பதற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியது.

அதைத் தொடர்ந்து பாதுகாப்பு வழிமுறைப் பின்பற்றி விருப்பம் உடைய மிசோரம் பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர். ஆனால் பள்ளி திறக்கப்பட்ட இரண்டு நாட்கள் கழித்து மிசோரத்தில் உள்ள லாங்க்லடாய் பகுதியில் செயல்பட்ட பள்ளி ஒன்றில் 2 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டது.

அடுத்து செமாபாக் பகுதியில் உள்ள எபினேசர் பகுதியில் 8 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டதும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனால் மிசோரம் பகுதியில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளையும் மூடுவதற்கு அம்மாநில அரசு உத்தரவிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

More News

பீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா?

சமீபத்தில் பீட்டர்பால் அவர்களிடம் இருந்து பிரிந்து விட்டதாக வனிதா உருக்கமான ஒரு வீடியோவை பதிவு செய்தார் என்பதும் அந்த வீடியோ பயங்கரமாக வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே 

மரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம்!!! மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்!!!

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பகுதியில் விவசாய நிலத்தில் குழித் தோண்டும் போது பழங்காலத்து பொருட்கள் கைப்பற்றபட்டு இருக்கிறது.

ஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா???

இங்கிலாந்து சட்டப்படி, அந்நாட்டின் குடிமக்கள் ஒரு வாரத்துக்கு 14 யூனிட் அளவு வரை மட்டுமே மது அருந்த வேண்டும்.

கொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றும் நாள் என்பதால் முதல் புரமோவே வழக்கம்போல் தாமதமாகத்தான் வந்துள்ளது

காருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு!!!

ஆந்திர மாநிலத்தில் ஆற்றைக் கடக்க முயன்ற கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் கடும்