பிரபல நடிகரின் மகன் திடீர் தலைமறைவு: இன்று நடக்கவிருந்த திருமணம் ரத்து


Send us your feedback to audioarticles@vaarta.com


பழம்பெரும் பாலிவுட் நடிகர் மிதுன்சக்கரவர்த்தியின் மகன் மஹா அக்ஷய் திருமணம் இன்று ஊட்டியில் நடக்கவிருந்த நிலையில் திடீரென அவர் தலைமறைவானதால் திருமணம் ரத்து செய்யப்பட்டது
பாலிவுட் நடிகர் மிதுன்சக்கரவர்த்தியின் மகன் மஹா அக்ஷய் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அந்த பெண் கர்ப்பமடைந்த பின்னர் கைவிட்டதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் மஹா அக்ஷய் மீது வழக்கு தொடர்ந்தனர்
இந்த நிலையில் இன்று மஹா அக்ஷய்க்கும் இன்னொரு பெண்ணுக்கும் ஊட்டியில் உள்ள மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான பங்களாவில் திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது.
இந்த நிலையில் இன்று மஹா அக்ஷய் ஜாமீன் மனு மீதான் விசாரணையில் அவருக்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் கைது செய்யப்படும் வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டதால் மஹா அக்ஷய் தலைமறைவானதாகவும், இதனால் இன்று திட்டமிட்டிருந்த திருமணம் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments