மித்ரன் ஜவஹர் இயக்கும் அடுத்த படத்தில் மாதவன்.. டைட்டில், நாயகி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்’ உள்பட சில படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் மாதவன் நாயகனாக நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் நாயகி, இசையமைப்பாளர்கள் உட்பட நட்சத்திரங்கள் மற்றும் தொழில் விவரங்கள் வெளியாகி உள்ளதை அடுத்து, இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தனுஷ் நடித்த ‘யாரடி நீ மோகினி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மித்ரன் ஜவஹர், அதன் பின்னர் ’குட்டி’, ’உத்தமபுத்திரன்’, ’மீண்டும் ஒரு காதல் கதை’, ’திருச்சிற்றம்பலம்’ போன்ற படங்களை இயக்கினார்.
இந்நிலையில் இயக்குனர் மித்ரன் ஜவஹர், தற்போது மாதவன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ’அதிர்ஷ்டசாலி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ள நிலையில், இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த படத்தின் நாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படத்தை ஏஏ மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் நடைபெற உள்ளதாகவும், குறிப்பாக ’ஹாரி பாட்டர்’ படத்தில் உள்ள காட்சிகள் படமாக்கப்பட்ட லொகேஷன்களில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சாய் தன்ஷிகா, ஜெகன், நிரூப் உள்பட பலர் நடிக்க உள்ளனர். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவில், தியாகராஜன் படத்தொகுப்பில் உருவாக இருக்கும் இந்த படம், மாதவனுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Unveiling the first look of #Adhirshtasaali,Directed by @MithranRJawahar, this has proven to be an awesome, unforgettable journey.😎✨
— Ranganathan Madhavan (@ActorMadhavan) November 3, 2024
#AdhirshtasaaliFirstLook 🤞🏻🎯@MadonnaSebast14 @SaiDhanshika @realradikaa @thisisysr @UpasanaRC @karthikmuthu14 @thiyaguedit @KlcPRJayaraman… pic.twitter.com/6boAqKPTdN
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments