எனக்கா தமிழ் தெரியாது! ரசிகருக்கு பதிலடி கொடுத்த மிதிலா ராஜ்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணியுடன் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி 3-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
இந்த வெற்றியை அடுத்து சச்சின் டெண்டுல்கர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தனது வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்திருந்தார். குறிப்பாக கேப்டன் மிதாலி ராஜ் அவர்களின் சிறப்பான ஆட்டத்திற்கு பாராட்டு தெரிவித்திருந்தார். சச்சினின் இந்த டுவீட்டுக்கு மிதிலா ராஜ் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மிதிலா ராஜின் நன்றி டுவீட்டுக்கு கமெண்ட் அளித்த ஒரு ரசிகர், மிதிலா ராஜ் தமிழகத்தை பூர்வீக கொண்டவராக இருந்தும் தமிழ் பேசத்தெரியாதவர் என்றும் அவருக்கு ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி மட்டுமே தெரியும் என குறிப்பிட்டிருந்தார்.
ரசிகரின் இந்த டுவீட்டுக்கு தமிழிலேயே டுவீட் செய்து மிதிலா ராஜ் பதிலடி கொடுத்திருந்தார். அதில், ‘தமிழ் என் தாய்மொழி, நான் தமிழ் நன்றாக பேசுவேன், தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை’ என்று கூறியுள்ளார். மேலும் அதை விட எனக்கு ஒரு இந்தியராக வாழ்வதில் தான் விருப்பம் அதிகம். என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி நீங்கள் விளம்பரம் தேடிக் தேடிக் கொள்ள வேண்டாம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மிதிலாராஜ் மட்டுமின்றி டுவிட்டர் பயனாளிகள் பலர் அந்த ரசிகரை வறுத்தெடுத்து வருவதால் டுவிட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் என் தாய் மொழி..
— Mithali Raj (@M_Raj03) October 15, 2019
நான் தமிழ் நன்றாக பேசுவேன்..
தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை.. but above it all I am very proud indian ! Also my dear sugu ,you constant criticism on each and every post of mine ,you day to day advice on how and what should I do is exactly what keeps me going https://t.co/udOqOO2ejx
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments