மிதாலிராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் முன்னணி வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் செய்துள்ளார் என்பது தெரிந்ததே. 225 க்கும் அதிகமான ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள் குவித்த ஒரே பெண் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ‘சபாஷ் மித்து’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மிதாலிராஜ் கேரக்டரில் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் டாப்ஸி நடித்து வருகிறார்.
ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்து வருகிறார். வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் மேலும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
With the swing of her bat she changed the game of cricket and broke stereotypes. She continues to inspire us and many more. This women's day we are cheering for the front runners in the fight to #BreakTheBias#ShabaashMithu #ShabaashWomen #ShabaashYou@M_Raj03 @taapsee pic.twitter.com/EjlMiVIKqG
— Viacom18 Studios (@Viacom18Studios) March 8, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments