சர்வதேச கிரிக்கெட்டில் புது சாதனை படைத்த மிதாலி ராஜ்… குவியும் பாராட்டு!
- IndiaGlitz, [Friday,March 12 2021] Sports News
இந்தியக் கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்து தற்போது ஓய்வு பெற்று இருக்கிறார். அவர் எப்படி இந்தியக் கிரிக்கெட்டில் சாதனை மன்னனாகத் திகழ்ந்தாரோ அப்படியே தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தன்னுடைய பாணியில் வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்.
அந்த வகையில் தற்போது லக்னோவில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கலந்து கொண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் 10 ஆயிரம் ரன்களை குவித்த உலகின் இரண்டாவது வீராங்கனையாக முன்னேறியுள்ளார். முன்னதாக தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக 2 ஆவது போட்டியில் கலந்து கொண்டபோது இந்திய அணிக்காக அதிகளவு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்ட வீராங்கனை என்ற சாதனையையும் படைத்து இருந்தார்.
தற்போது 10 ஆயிரம் ரன்களை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் குவித்து உலகின் 2 ஆவது முன்னிலை வீராங்கனை என்ற அடையாளத்தை பெற்றுள்ளார். இதனால் மிதாலி ராஜ்க்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மிதாலி ராஜ் கடந்த 1999 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான சர்வதேச போட்டியில் முதல் முறையாக விளையாடத் தொடங்கினார். தற்போது 10 டெஸ்ட் தொடர் போட்டி, 82 ஒருநாள் போட்டி, 211 டி20 போட்டிகளில் விளையாடி இதுவரை 311 சர்வதேச போட்டிகளில் முதல் 10 ஆயிரம் ரன்களை குவித்து உள்ளார்.
இதற்கு முன்பு இங்கிலாந்து வீராங்கனை சார்லோட்ஸ் 309 சர்வதேசப் போட்டிகளில் 10,273 ரன்களை குவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஓய்வும் பெற்று விட்டார். இந்நிலையில் சிறிய வயதில் இந்த சாதனையைப் படைத்த மிதாலி ராஜ் இன்னும் அதிக போட்டிகளில் கலந்து கொண்டு மேலும் பல சாதனைகளை படைப்பார் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
What a champion cricketer! ????
— BCCI Women (@BCCIWomen) March 12, 2021
First Indian woman batter to score 10K international runs. ?? ??
Take a bow, @M_Raj03! ????@Paytm #INDWvSAW #TeamIndia pic.twitter.com/6qWvYOY9gC