அவுட்டாக்க வாய்ப்பு இருந்தும் அப்படி செய்யாத பவுலர்… ரசிகர்களை கவர்ந்த வீடியோ காட்சி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது மான்கட் முறையில் பேட்ஸ்மேனை அவுட்டாக்க வாய்ப்பு கிடைத்தும் அப்படி செய்யாமல் பவுலரை எச்சரித்தார். இந்த வீடியோ காட்சி தற்போது ரசிகர்கள் மத்தியில் கடும் வைரலை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தக் காட்சியில் மிட்சல் பந்தை வீசுவதற்கு முன்பே இங்கிலாந்து பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியேறுகிறார். அப்போது மிட்சல் கையைக் காண்பித்து கிரீஸ்க்குள் நிற்குமாறு எச்சரிக்கிறார். இந்தக் காட்சி ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிவீரர்கள் இங்கிலாந்து அணி வீரர்களுடன் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்று தொடரைக் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இங்கிலாந்தில் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 303 ரன்களை குவித்து இருந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது.
நேற்று நடைபெற்ற போட்டியில் தான் மிட்சல் இப்படி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 49 ஆவது ஓவரில் மிட்சல் பந்தை வீச முற்படுகிறார். அப்போது பந்தை வீசும் முன்பே இங்கிலாந்து வீரர் அடில் ரஷீத் கிரீஸை விட்டு நகர்ந்து செல்கிறார். அதைக்கண்ட மிட்சல் ஸ்டார்க் பந்தை வீசாமல் ரஷீத்தை கிரீஸ்க்குள் நிற்குமாறு எச்சரித்து விட்டு விடுகிறார். மான்கட் முறையில் அவுட்டாக்க வாய்ப்பு இருந்தும் அப்படி செய்யாத மிட்சலுக்கு தற்போது ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Gotta feel for Mitchell Starc, even after going for plenty he didn't go for Mankading and gave a clear cut warning to Adil Rashid. ?? pic.twitter.com/yd8JeYHXJd
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 16, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments