உலக சாதனை படைத்த அஜித்தின் முயற்சி
- IndiaGlitz, [Friday,July 13 2018]
தல அஜித்தின் ஆலோசனையில் மாணவர்கள் குழு ஒன்று உருவாக்கியுள்ள ஆளில்லா விமானம் உலக சாதனை செய்துள்ளது. இந்த ஆளில்லா விமானம் சுமார் ஆறு மணி நேரம் விண்ணில் பறந்து சாதனை செய்துள்ளது.
தல அஜித் நடிகராக மட்டுமின்றி பல்வேறு விஷயங்களில் ஆர்வம் கொண்டவர் என்பது தெரிந்ததே. பைக் ரேஸ், கார் ரேஸ், சமையல் உள்பட அவர் தொடாத துறைகள் குறைவு. இந்த நிலையில் சென்னை மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்கள் இணைந்து ஆளில்லா விமானம் ஒன்றை தயாரிக்க டீம் தக்ஷா என்னும் பெயரில் புதிய மாணவர் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவுக்கு அஜித் முக்கிய ஆலோசகராக செயல்பட்டார்.
அஜித்தின் ஆலோசனையுடன் உருவான ஆளில்லா விமானம் 111 பொறியியல் கல்லூரிகளுக்கிடையே நடந்த போட்டியில் கலந்து கொண்டது. இந்த போட்டியில் அஜித் தலைமையிலான மாணவர்கள் குழுவான தக்ஷா குழு வடிவமைத்த ஆளில்லா விமானம் விண்ணில் 6 மணி நேரம் 7 நிமிடம் பறந்து உலகத்திலேயே அதிக நேரம் பறக்கக்கூடிய ஆளில்லா விமானம் என்ற சாதனையை படைத்துள்ளது.
ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இந்த ஆளில்லா விமானத்தில் சுமார் பத்து கிலோ எடையுள்ள பொருளை எடுத்து செல்லாம். வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரிடர் துயர் நடக்கும் நேரங்களில் மருந்து பொருட்களை எடுத்து செல்ல இந்த ஆளில்லா விமானம் பெரிதும் உதவியாக இருக்கும். அஜித் தலைமையில் உருவான இந்த ஆளில்லா விமானம் இந்தியாவின் புகழை உலகிற்கு எடுத்து சென்றுள்ளது.