வீடியோ கேம் விளையாட அனுமதிக்காத அக்காவை சுட்டு கொலை செய்த தம்பி
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில ஆண்டுகளாகவே சிறுவர்கள் துப்பாக்கியால் சுடும் சம்பவங்கள் அமெரிக்காவில் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் அந்நாட்டின் மிஸிசிபி நகரில் 9 வயது சிறுவன் ஒருவன் தனது உடன்பிறந்த அக்காவை சுட்டு கொலை செய்துள்ளான். வீடியோ கேம் விளையாட அக்கா அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் கொலை செய்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மிஸிசிபி நகரில் உள்ள ஒரு சிறுவன் வீடியோ கேம் விளையாட ரிமோட் கண்ட்ரோலை தனது அக்காவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவனது அக்கா மறுக்கவே ஆத்திரமடைந்த சிறுவன், படுக்கையறையில் உள்ள ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து அக்காவை நோக்கி சுட்டான். இதனால் குண்டு அந்த சிறுமியின் பின்னந்தலையில் பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வந்தாலும் எந்தவித வழக்கும் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. இந்த சம்பவம் நடந்தபோது இவர்களது தாயார் சமையல் செய்து வந்ததாகவும், துப்பாக்கி சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது தனது மகள் ரத்த வெள்ளத்தில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments