ஒரு வருடத்திற்கும் மேல் தள்ளிப்போனது சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாக ரிலீஸ்.. ரசிகர்கள் அதிருப்தி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஜூலை மாதம் ரிலீசான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி ஒரு வருடம் தள்ளிப் போனதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்த 'Mission: Impossible – Dead Reckoning’ படத்தின் முதல் பாகம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. 291 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயார் செய்த இந்த படம் கிட்டத்தட்ட இரு மடங்கு லாபம் சம்பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாகவும் 2024 ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வந்துள்ள தகவல் படி இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி கிட்டத்தட்ட ஒரு வருடம் தள்ளிப் போயுள்ளது.
அதாவது 2025 ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி வெளியாகும் 'Mission: Impossible – Dead Reckoning 2’ வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments