'மிஷன் இம்பாஸிபிள் 7' டிரைலர்.. இரண்டரை நிமிட ஆக்சன் விருந்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்த ’மிஷன் இம்பாசிபிள்’ திரைப்படம் ஏற்கனவே ஆறு பாகங்கள் வெளியான நிலையில் தற்போது ஏழாம் பாகம் உருவாகியுள்ளது என்பதும், இந்த படம் ஜூன் 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை டாம் குரூஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சுமார் இரண்டரை நிமிடங்கள் உள்ள இந்த ட்ரெய்லரில் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் உள்ளன என்பதும் இதுவரை ஆக்சன் ரசிகர்கள் பார்த்திராத வகையில் அந்த காட்சிகள் விருந்தாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்சன் காட்சிகள், கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் படமாக்கப்பட்ட விதம் அசத்தலாக இருப்பதாக இந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த திரைப்படத்தை திரையில் காண இனி மேலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் மெக்குவாரி என்பவரின் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் டாம் குரூஸ், ஹெய்லே அட்வெல், சைமன் பெக், ரெபாகோ பெர்குசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் முந்தைய ’மிஷன் இம்பாஸிபிள்’ படங்களைப் போலவே வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
It's time to pick a side. Here is the new trailer for #MissionImpossible - Dead Reckoning Part One. pic.twitter.com/20VjrlxxP1
— Tom Cruise (@TomCruise) May 17, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com