மலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழும் ரயில்: திரைப்பட படப்பிடிப்பின் திகில் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையிலிருந்து ஓடும் ரயில் இன்ஜின் ஒன்று பள்ளத்தாக்கில் விழும் காட்சியின் படப்பிடிப்பு நடந்த நிலையில் அதுகுறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
ஹாலிவுட்டில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற ‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தின் 7வது பாகத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நாயகனாக டாம்குரூஸ் நடித்து வருகிறார்
இந்த படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்து நாட்டில் உள்ள டெர்பிஷையர் என்ற இடத்தில் நடந்த நிலையில் இது குறித்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரயில் எஞ்சின் ஒன்று மிக வேகமாக வந்து மலைப்பகுதியிலிருந்து பள்ளத்தாக்கை நோக்கி வந்து பள்ளத்தாக்கில் படுபயங்கரமாக விழும் காட்சி உள்ளது
இந்த காட்சியை படக்குழுவினர் ஹெலிகாப்டரில் இருந்து படமாக்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த காட்சி திரையில் பார்க்கும்போது த்ரில்லாக இருக்கும் என்று ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Mission impossible scene filmed yesterday in Derbyshire pic.twitter.com/gRJFzJQuvc
— Ian Gambles ⚔ (@cherrystreet71) August 21, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments