close
Choose your channels

அவனுக்கு என் கண்ல பயம் தெரியுற வரைக்கும் தான் எனக்கு சேஃப்.. 'மிஷன் சாப்டர் 1' டிரைலர்..!

Friday, January 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில், ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான ‘மிஷன் சாப்டர் 1’ என்ற திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

சுமார் இரண்டு நிமிடங்கள் உள்ள இந்த ட்ரைலரில் இங்கிலாந்து நாட்டில் உள்ள சிறை ஒன்றில் கைதியாக இருக்கும் அருண் விஜய் எப்படி தப்பித்து செல்கிறார் என்பதும் அதை தடுக்க அந்த சிறை அதிகாரி எமி ஜாக்சன் எடுக்கும் நடவடிக்கை என்ன என்பது தான் கதையாக தெரிகிறது

சிறைக்கைதிகள் கூட்டம் கூட்டமாக அருண் விஜய்யுடன் சண்டை போடுவது, அருண் விஜய் ஒரே ஆளாக ஏராளமான சிறை கைதிகளுடன் மோதும் சண்டைக் காட்சி என படத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகள் அதிகம் இருப்பதால் ஆக்சன் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நிமிஷா சஞ்சயனின் உணர்ச்சிகரமான நடிப்பு இந்த படத்தின் ஹைலைட் ஆக இருக்கும்.

அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஞ்சயன், அபி ஹாசன் உள்பட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அவருடைய பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் அருண் விஜய்க்கு மற்றொரு வெற்றி படமாக இந்த ‘மிஷம் சாப்டர் 1’ இருக்கும் என்பது இந்த ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment