மாயமான விக்ரம் லேண்டர் கண்டிபிடிக்கப்பட்டது: இஸ்ரோ சிவன் பரபரப்பு தகவல்
- IndiaGlitz, [Sunday,September 08 2019]
சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் சந்திரனில் தரையிறங்கவிருந்த ஒருசில நிமிடங்களுக்கு முன் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விக்ரம் லேண்டர் சந்திரனில் தரையிறங்கியதா? எங்கே சென்றது என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் இருந்தது.
இந்த நிலையில் விக்ரம்லேண்டர் நிலை குறித்து தெரியாவிட்டாலும், ‘சந்திரயான் 2 ஆர்பிட்டரின் ஆயுட்காலம் 7.5 ஆண்டுகள் உள்ளது என்றும், அதில் உள்ள மிக நவீன கேமரா மூலம் விக்ரம் லேண்டரின் நிலை தெரிய வரும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி மாயமான விக்ரம் லேண்டர் கண்டிபிடிக்கப்பட்டதாகவும், அது செயல்படும் வகையில் இருக்கின்றதா? என்ற ஆய்வு நடந்து வருவதாகவும் இஸ்ரோ சிவன் தெரிவித்துள்ளார். இப்போதைய நிலையில் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பகுதியில் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், விக்ரம் லேண்டரை நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். சந்திராயன் 2 விண்வெளி பயணத்தில் இந்தியாவுக்கு 95% வெற்றி கிடைத்துள்ள நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட லேண்டரை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டால் 100% வெற்றி கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.