காணாமல் போன பிரபல பாடகி: 12 நாட்களுக்கு சிதைந்த உடல் மீட்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாடகி ஒருவர் கடந்த 12 நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில் தற்போது உடல் சிதைந்து அவருடைய பிணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது .
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாடகி சங்கீதா. இவர் கடந்த மே 11ஆம் தேதி காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாடகி சங்கீதாவை தேடி வந்த நிலையில் ஹரியானா மாநிலத்திலுள்ள பைனி பைரன் என்ற கிராமத்தில் ஒரு பெண்ணின் சிதைந்த உடல் இருப்பதை கேள்விப்பட்ட உடனடியாக அங்கு சென்று பார்த்த போது உடல் சிதைந்து பிணமாக இருந்தது சங்கீதா தான் என்று கண்டுபிடிக்கப் பட்டது.
இதனையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர் என்பதும் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்தபோது சங்கீதாவை திட்டமிட்டு கொலை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இசை வீடியோ எடுப்பதற்காக சங்கீதாவை வரவழைத்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காணாமல்போன பாடகி ஒருவர் 12 நாட்கள் கழித்து உடல் சிதைந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments