தெருவில் பிச்சை எடுத்த என்கவுண்டர் போலீஸ் அதிகாரி… அதிர்ச்சியில் உறைந்த நண்பர்கள்!!!

  • IndiaGlitz, [Tuesday,November 17 2020]

 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக செயல்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் தெருவில் பிச்சைக்காரர் போல பிச்சை எடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அம்மாநிலத்தின் குவாலியர் பகுதியைச் சேர்ந்தவர் மனீஷ் மிஸ்ரா. இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். மேலும் என்கவுண்டர் போலீசுக்கான பயிற்சியில் இவர் 250 காவலர்களுள் சிறந்த தடகள வீரராகவும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

இதனால் அம்மாநிலத்தின் குனா போன்ற பல்வேறு மாவட்டங்களில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் தனது வீட்டில் இருந்து மனிஷ் மிஸ்ரா தொலைந்து போனதாகக் கூறப்படுகிறது. அவரை 11 ஆம் தேதி உடன் பணியாற்றிய சில நண்பர்கள் ரோந்து பணியின்போது அடையாளம் கண்டு அதிர்ந்து போய் இருக்கின்றனர். இதனால் அவரை மீட்டு தற்போது காப்பகத்தில் சேர்த்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய மனக்கோளாறு காரணமாக மனிஷ் தனது வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அப்போது வீட்டில் இருந்து அவர் அடிக்கடி காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. அப்படி காணாமல் போனவர் மனிஷை 15 வருடங்களுக்கு பிறகு நண்பர்கள் ஏதேச்சையாகக் கண்டுபிடித்து உள்ளனர்.

லக்ஷர் பகுதியில் சாலையின் ஓரமாக நடுங்கிக் கொண்டிருந்த மனிஷ்க்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த அவரது நண்பர்கள் யாரோ ஒரு பிச்சைக்காரர் என மனம் இரங்கி சட்டை மற்றும் காலணிகளைக் கொடுத்து இருக்கின்றனர். இப்படி கொடுத்துவிட்டு சென்ற அவர்களை மனிஷ் பெயர் சொல்லி அழைத்து இருக்கிறார். உடனே அதிர்ந்துபோன அவர்கள் அடையாளம் தெரிந்து கொண்டு மனம் வருந்தி தற்போது காப்பகத்தில் சேர்த்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

More News

குழாயடி சண்டையில் இறங்கிய அர்ச்சனா-நிஷா!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 45 நாட்கள் ஆகிவிட்டதை அடுத்து 45 மணி நேரம் டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கால் இன்றும் நாளையும் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும்,

மீண்டும் இணையும் சூர்யா-கவுதம் மேனன்: இன்று முதல் படப்பிடிப்பு!

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 'காக்க காக்'க மற்றும் 'வாரணம் ஆயிரம்' ஆகிய இரண்டு திரைப்படங்களில் சூர்யா நடித்து இருந்தார் என்பதும் இரண்டுமே மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும் தெரிந்ததே

ஆஸ்திரேலிய லீக் போட்டிகளில் புது விதிமுறை! இது லீக் போட்டிகளின் தலைவிதியை மாற்றுமா???

ஆஸ்திரேலிய பிக்பேஷ் லீக் (டி20) போட்டிகளுக்கான புதிய விதிமுறைகளை அதன் பிபிஎல் நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது.

அடையாறு ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளப்பெருக்கு… பாதிப்பு எந்தெந்தப் பகுதிகளுக்கு???

கடந்த சில தினங்களாக சென்னையின் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசிக்கு உதவிய பிரபல நடிகர்கள்!

'கருப்பன் குசும்புக்காரன்' என்ற வசனத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் தவசி கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறித்த செய்தியை நேற்று பார்த்தோம்