காணமல் போன ஜா மா பொது வெளிக்கு வந்தார்? என்ன நடந்தது அவருக்கு?

  • IndiaGlitz, [Wednesday,January 20 2021]

கடந்த அக்டோபர் மாத இறுதியில் தான் கலந்து கொள்ள வேண்டிய பிரபல டிவி நிகழ்ச்சி உரையாடலில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார் அலிபாபா நிறுவனத்தின் இணை இயக்குநர் ஜாக் மா. அதன்பின்பு வேறு எந்த பொது நிகழ்விலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இதனால் சந்தேகம் எழுப்பிய ஊடகங்கள் சீன அரசாங்கம் கொடுத்த நெருக்கடி காரணமாக அவர் தலைமறைவாகி இருக்கலாம் அல்லது அவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வரலாம் என்ற சந்தேகத்தை கிளப்பி இருந்தன.

சமீபகாலமாக சீன அரசாங்கத்திற்கும் ஜாக் மாவிற்கும் இடையிலான பேச்சு வார்த்தையில் கடும் மோதல்கள் இருந்து வந்தன. இவர் சீன அரசாங்கத்தின் ஓழுங்குமுறை கட்டுப்பாட்டு விதிகளை குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும் தொழில் துறையின் வளர்ச்சிப் போக்கை இதுபோன்ற விதிமுறைகளை தடுக்கின்றன என்றும் பழமைவாதக் கருத்து உடையவர்கள்தான் இப்படியான விதிமுறைகளை கொண்டு வருவார்கள் என்பது போன்ற விமர்சனங்களை தெரிவித்து இருந்தார். இதனால் அவருடைய ஃபிண்டெக் நிறுவனமான ஆண்ட் பைனான்சலின் IPO நிறுவனத்தின் மீது தீவிர விசாரணை செய்யப்பட்டது. மேலும் அந்த நிறுவனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதாகக் குற்றம்சாட்டி 37 பில்லியன் டாலர் மதிப்புடைய அந்நிறுவனத்தை சீன அரசாங்கம் மூடவும் செய்தது.

இதையடுத்து ஜாக் மாவின் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜாக் மா கடந்த அக்டோபர் மாத இறுதிக்குப் பின் காணாமல் போய்விட்டார் என்றும் ஊடகங்கள் பரபரப்பை கிளப்பின. இதனால் காணாமல் போன ஜாக் மா என்ன ஆனார்? சீன அரசாங்கத்திற்கு பயந்து தலைமறைவானாரா? அல்லது நெருக்கடி கொடுக்கப்பட்டு வெளியே வராமல் கட்டுப்படுத்தப் படுகிறாரா? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்நிலையில் 100 கிராம ஆசிரியர்கள் அடங்கிய ஒரு ஆன்லைன் உரையாடலில் ஜாக் மா இன்று பேசியுள்ளார். 50 வினாடிகள் கொண்ட அந்த வீடியோ காட்சியில் ஜாக் மா நீல நிற உடையணிந்து பேசினார். மேலும் இந்த நிகழ்வு வழக்கமாக தெற்கு ஹைனானின் சன்யா பிராந்தியத்தில் நடைபெறும். கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஆன்லைனில் நடத்தபப்டுகிறதுஎன்று விளக்கம் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 3 மாதங்களாக காணாமல் போன ஜாக் மாவைக் குறித்து பல உலகத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். ஐநா அவையும் கேள்வி எழுப்பி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொதுவெளியில் தோன்றி ஜாக் அனைத்துக் கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

More News

2 கோடி வசூல்ன்னா 20 கோடின்னு சொல்வாங்க: 'மாஸ்டர்' பட வசூலை கலாய்த்தாரா அமைச்சர்?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நிலையில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூல் செய்து விட்டதாகவும் உலகம் முழுவதும் 200 கோடி வசூலை நெருங்கி

சிவகார்த்திகேயன் உதவியால் நனவான கனவு: மருத்துவ மாணவி நெகிழ்ச்சி!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள பூக்கொல்லை என்ற கிராமத்தைச் சேர்ந்த சஹானா என்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தும் குடும்ப வறுமையால் டாக்டருக்கு படிக்க வேண்டும்

கமலுக்கு மெசேஜ் அனுப்பிய பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி!

105 நாட்களாக நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனின் டைட்டில் வின்னர் ஆக ஆரி மக்களால் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் அவருக்கு சம்பளம் மற்றும் பரிசு தொகை சேர்த்து கிட்டத்தட்ட

சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: விடுதலையாக ஒருவாரம் இருக்கும் நிலையில் பரபரப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்தார்

ரூ.2 லட்சத்தில் லம்போஹினியா? அசத்தல் சாதனை புரிந்த கேரள இளைஞர்!

மங்களூருவில் உள்ள ஒரு தனியார் தொழில் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்த 25 வயது இளைஞர் அனாஸ் பேபி.