ஓட்டுனர் உரிமம் காணாமல் போய்விட்டால் விண்ணப்பிக்க எளிய வழி
Send us your feedback to audioarticles@vaarta.com
நாளை முதல் ஓட்டுனர் உரிமம் ஒரிஜினலை கையில் வைத்து கொண்டுதான் வாகனங்களை ஓட்ட முடியும். ஒரிஜினல் உரிமம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டினால் மூன்று மாதம் சிறைத்தண்டனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஓட்டுனர் உரிமத்தை கையில் வைத்து கொண்டே செல்லும் நிலையில் தொலைந்துவிட வாய்ப்பு உண்டு. ஓட்டுனர் உரிமம் தொலைந்துவிட்டால் அதற்கு காவல்துறையில் சான்றிதழ் வாங்கி பின்னர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த நடைமுறையால் காலதாமதம் ஆகிய நிலை நேற்று வரை இருந்தது.
ஆனால் இன்று முதல் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் இனிமேல் ஓட்டுனர் உரிமம் காணாமல் போனால் ஆன்லைனிலேயே விண்ணப்பித்து சான்றிதழ் பெற்று கொள்ளலாம். இதற்கு eservices.tnPolice.gov.in என்ற காவல்துறை இணையதளத்தில் விண்ணப்பித்து, சான்றிதழ் பெற்று கொள்ளலாம். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது.
ஓட்டுநர் உரிமம் மட்டுமின்றி வாகன பதிவு, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் காணாமல் போய்விட்டாலும் இதே இணையதளத்தின் மூலம் சான்றிதழ் பெற்று கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com