ஓகி புயலால் திசைமாறிய 30 குமரி மீனவர்கள் கரை சேர்ந்த அதிசயம்
- IndiaGlitz, [Tuesday,December 19 2017]
சமீபத்தில் ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல் போன நிலையில் அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் செய்து வருகின்றனர். மேலும் இன்று பாரத பிரதமர் நரேந்திரமோடி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறார்
இந்த நிலையில் ஓகி புயலுக்கு முன்னரே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னிகுமரியை சேர்ந்த 30 பேர் தற்போது கரை திரும்பியுள்ளனர். மூன்று மோட்டார் படகுகளில் சென்ற இந்த 30 மீனவர்கள் ஓகி புயல் காரணமாக திசை மாறி சென்ற நிலையில் தற்போது பத்திரமாக கரை திரும்பியுள்ளதால் மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோன்று இன்னும் பல மீனவர்கள் வழிதவறி இருக்கலாம் என்றும் அவர்களை கண்டுபிடித்து கரைக்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.